ராகுல் ஒரு குடிகாரர்: பா.ஜ., எம்.பி. கங்கனா கண்டுபிடிப்பு
ராகுல் ஒரு குடிகாரர்: பா.ஜ., எம்.பி. கங்கனா கண்டுபிடிப்பு
ராகுல் ஒரு குடிகாரர்: பா.ஜ., எம்.பி. கங்கனா கண்டுபிடிப்பு
UPDATED : ஜூலை 31, 2024 07:34 PM
ADDED : ஜூலை 31, 2024 07:24 PM

புதுடில்லி: ராகுல் ஒரு குடிகாரர் குடித்துவிட்டு பார்லிமென்டிற்குள் வருகிறாரா என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பா.ஜ., எம்.பி.,யும் நடிகையுமான கங்கனா ரணாவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் லோக்சபாவில் பேசிய எதிர்கட்சி தலைவரும் காங்.எம்.பி.யுமான ராகுல்,
அதிகார மையமாக பிரதமர், அமித் ஷா, மோகன் பாகவத் ,சி.பி.ஐ., வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள். அரசியல் அதிகாரம். இந்த மூன்றும் சேர்ந்து தான் சக்கர வியூகத்துடைய ,அதிகார மைய அம்சங்களாக நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கின்றன. இதனை உடைத்து எறியும் காலம் வரப்போகிறது என்றார்.
ராகுல் பேச்சு குறித்து பா.ஜ., எம்.பி.யும் பாலிவுட் நடிகையுமான கங்கனா ரணாவத் கூறியது, ஜனநாயக முறையில் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் பிரதமர் அவரை பற்றி ராகுல் பேசியது சரியல்ல. ராகுல் ஒரு குடிகாரர் போல் தெரிகிறது. மது அல்லது போதை பொருளை பயன்படுத்தி பார்லிமென்ட்டிற்குள் வருகிறாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு உடனே உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.