உ.பி. சட்டசபைக்குள் புகுந்த மழைநீர்:
உ.பி. சட்டசபைக்குள் புகுந்த மழைநீர்:
உ.பி. சட்டசபைக்குள் புகுந்த மழைநீர்:
UPDATED : ஜூலை 31, 2024 08:13 PM
ADDED : ஜூலை 31, 2024 07:59 PM

லக்னோ: உ.பியில் பெய்து வரும் கனமழை காரணமாக தலைநகர் லக்னோவில் சட்டசபைக்குள் மழைநீர்புகுந்தது.
உத்திரபிரதேச
மாநிலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால்
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் உத்தர
பிரதேச சட்டசபையில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று (31.07.2024) தலைநகர்
லக்னோ உள்ளிட்ட பெருநங்களில் 2 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.
இதில்
மாநில சட்டசபையான விதான் சபா கட்டிடத்திற்குள் மழைநீர் புகுந்தது.
கட்டிடத்தின் நுழைவாயில், தாழ்வாரம் மற்றும் தரைத்தளத்தில் உள்ள சில
அறைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. தேங்கி நின்ற மழைநீரை அகற்றும் பணியில்
ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அதே சமயம் சட்டசபை அமர்வுகள் நடைபெறும் அமர்வுகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
சட்டசபைக்குள்
மழைநீர் தேங்கியுள்ளதை சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.ஒருவர் வீடியோவாக
எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு
குறை கூறினார்.