மஹாராஷ்டிரா கவர்னராக பதவியேற்றார் சி.பி .ராதாகிருஷ்ணன்
மஹாராஷ்டிரா கவர்னராக பதவியேற்றார் சி.பி .ராதாகிருஷ்ணன்
மஹாராஷ்டிரா கவர்னராக பதவியேற்றார் சி.பி .ராதாகிருஷ்ணன்
ADDED : ஜூலை 31, 2024 08:19 PM

மும்பை: மஹாராஷ்டிரா கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு மாநிலங்களின் கவர்னர்கள் இடமாற்றம் மற்றும் புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதில் ஜார்க்கண்ட் கவர்னராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன், மஹாராஷ்டிரா கவர்னராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சந்தோஷ் குமார் கங்வார் ஜார்க்கண்ட் கவர்னாக நியமிக்கப்பட்டார். புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று (31.07.2024) மஹாராஷ்டிரா கவர்னராக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். அவருக்கு மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஏக்நாத்ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.