ADDED : ஜன 07, 2024 06:45 AM
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் அருந்தவம் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் சிவசக்தி, சிவா கலந்து கொண்டனர். பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வென்ற மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.