ADDED : மார் 23, 2025 04:51 AM
விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெருங்குடி: சரஸ்வதி நாராயணன் கல்லுாரி ரோட்ராக்ட் கிளப், ஒய்.ஆர்.சி., மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் பேசினர். மாணவி ஹரிணி தொகுத்துரைத்தார். பேராசிரியர்கள் கோபாலசுந்தர், தமீம் அசாருதீன் ஒருங்கிணைத்தனர்.
பயிற்சி வகுப்புகள் நிறைவு
திருப்பரங்குன்றம்: சவுராஷ்டிரா கல்லூரி காந்திய சிந்தனை கழகம் சார்பில் காந்திய சிந்தனையில் சான்றிதழ் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் பிப். 24 முதல் மார்ச் 14 வரை நடந்தது. மகாத்மா காந்தியின் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள், அகிம்சை, சர்வோதயம், சுயராஜ்ஜியம், சுதந்திரத்திற்காக அவர் நடத்திய முக்கிய விடுதலை இயக்கங்கள் குறித்து விளக்கப்பட்டது. பயிற்சி வகுப்பின் நிறைவு விழாவில் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். காந்திய சிந்தனை ஒருங்கிணைப்பாளர் கவிதா வரவேற்றார். காந்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் பேசினார். முதல்வர் ஸ்ரீநிவாசன் நிறைவு உரையாற்றினார்.
பாண்டித்துரை தேவருக்கு மரியாதை
மதுரை: நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவிய பாண்டித்துரை தேவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி செந்தமிழ்க் கல்லுாரியில் வைத்திருந்த அவரது உருவப்படத்திற்கு முன்னாள் மாணவர் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முதல்வர் சாந்திதேவி, முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் இளங்கோவன், செயற்குழு உறுப்பினர் குருஆறுமுகப் பெருமாள், தலைமை ஆசிரியர் சங்க முன்னாள் செயலாளர் பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
சொற்பொழிவு
மதுரை: பாத்திமா கல்லுாரி வேதியியல் ஆராய்ச்சி மையம் சார்பில் சகுந்தலா அறக்கட்டளை சொற்பொழிவு துறைத் தலைவர் சுகுமாரி தலைமையில் நடந்தது. தியாகராஜர் கல்லுாரி வேதியியல் மைய தலைவர் இளங்கோவன் பேசினார். மாணவிகளுக்கு தேசிய அறிவியல் தினம் தொடர்பான போட்டிகள் நடத்தி பரிசு வழங்கினர். உதவி பேராசிரியைகள் பிரியதர்ஷினி, அருள்தீபா ஏற்பாடு செய்தனர்.
ஆண்டு விழா
மதுரை: சிங்காரத்தோப்பு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் ஜோசப் ஜெயசீலன் வரவேற்றார்.
துணைமேயர் நாகராஜன், மண்டல தலைவர் முகேஷ் சர்மா, கல்விக் குழு தலைவர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் பானு, வட்டார கல்வி அலுவலர் மோசஸ் பெஞ்சமின், உதவி மின் பொறியாளர் ஜெயலட்சுமி, எஸ்.எம்.சி., தலைவர் பரமேஸ்வரி, உறுப்பினர் ரங்கராஜன், மேற்பார்வையாளர் மேரி கிறிஸ்டினா, ஓய்வு தலைமையாசிரியை சுமதி பங்கேற்றனர். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் ஜெயமுருகன் நன்றி கூறினார்.
பாராட்டு விழா
மதுரை: ரூபி மெட்ரிக் மேல்நிலை, மழலையர் தொடக்கப் பள்ளிகளில் தென்னிந்திய அளவில் கராத்தே போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்றவர்கள் பாராட்டப்பட்டனர். தாளாளர் வெங்கடேசன் தலைமை வகித்து பரிசு வழங்கினார். கராத்தே பயிற்சியாளர் சென்சாய் கவுரிசங்கர் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
கல்லுாரி நாள்
திருமங்கலம்: கப்பலுார் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் கல்லுாரி நாள் விழா நடந்தது. கணிதவியல் துறை தலைவர் ஹரி நாராயணன் வரவேற்றார். முதல்வர் லட்சுமி தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். அம்பிகா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் சரளா தேம்பாவணி பங்கேற்றார். மாணவர் பேரவை தலைவர் பிருந்தா நன்றி கூறினார்.
ஆண்டு விழா
திருமங்கலம்: மவுலானா ஆசாத் தெருவில் உள்ள நகராட்சி பெண்கள் துவக்க பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் கலைராணி வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் செல்வி, வட்டார கல்வி மேற்பார்வையாளர் சரவணன், கவுன்சிலர் ரம்ஜான் பேகம், தி.மு.க., வார்டு செயலாளர் ஜாகிர்உசேன் பங்கேற்றனர்.
பள்ளி ஆண்டு விழா
சோழவந்தான்: முள்ளிப்பள்ளம் அரசு நடுநிலைப்பள்ளியில் 113வது ஆண்டு விழா நடந்தது. முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் ராஜா தலைமை வகித்தார். சங்கரன், முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனர். உதவி ஆசிரியை சிவகாமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை காந்தாமணி அறிக்கை வாசித்தார்.
உதவி ஆசிரியை உமாராணி விழாவை தொகுத்து வழங்கினார்.முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள், சந்தான லட்சுமி, ஒப்பந்தக்காரர் ஆனந்தன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்கள்.
கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியைகள் பாரதி, கோமதி உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியை மலர்விழி நன்றி கூறினார்.
வாசகர் வட்ட விழா
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு தமிழ்த்துறை சார்பில் 91வது வாசகர் வட்ட விழா தலைவர் ராஜகோபால் தலைமையில் நடந்தது. செயலாளர் விஜயராகவன், பொருளாளர் ஆழ்வார்சாமி, முதல்வர் ராம சுப்பையா முன்னிலை வகித்தனர். தமிழ்த் துறை தலைவர் பரிமளா வரவேற்றார். மாணவியர் சங்கீதா, செல்வமீனா, ரேஷ்மா, சரவணன் ஆகியோர் நுால்கள் அறிமுக உரையாற்றினர். பேராசிரியர்கள் ஜகந்நாத், முத்துராஜா ஒருங்கிணைத்தனர்.
நுாற்றாண்டு விழா
கொட்டாம்பட்டி: மங்களாம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் பாலா சங்கர் வரவேற்றார்.
வட்டார கல்வி அலுவலர் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவி கணேஷ் முன்னிலை வகித்தார். படிப்பு, கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கபட்டது. ஆசிரியர் பயிற்றுநர் வனிதா, மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.
இலக்கிய போட்டிகள்
பெருங்குடி: சரஸ்வதி நாராயணன் கல்லுாரி ஆங்கிலத்துறை சார்பாக 'மினர்வா 2025' என்ற தலைப்பில் மாணவர்களுக்கான இலக்கிய போட்டி நடந்தது. முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். மாணவி ஜெசிக்கா வரவேற்றார். மதுரை கல்லுாரி பேராசிரியர் வெங்கடேஷ் பேசினார்.
பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய பண்டைய இலக்கியத்தின் இன்றைய பண்பு குறித்த போட்டி நடந்தது. அதிக புள்ளிகள் பெற்ற மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி முதல் பரிசு வென்றது. மாணவி மமிண்டிஷா நன்றி கூறினார். துறை தலைவர் ஜெய்சிங் ஒருங்கிணைத்தார்.
மாணவர்கள் விழிப்புணர்வு
அலங்காநல்லுார்: உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவர்கள் அமரேசன், ரித்தீஷ் பாபு, ஹேமச்சந்திரன், கண்ணன், தனசீலன், ஷரபத் அசன், சந்தோஷ் குமார், மதன் குமார் ஆகியோர் அலங்காநல்லுார் பகுதியில் வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தில் தங்கி பயிற்சி பெறுகின்றனர். ஆதனுாரில் கொய்யாவில் வரக்கூடிய பழ ஈக்களை குறைக்கக்கூடிய இனக்கவர்ச்சி பொறி குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
யூத் பார்லிமென்ட்
மதுரை: அமெரிக்கன் கல்லுாரியில் மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம், என்.எஸ்.எஸ்., மண்டல இயக்குனரகம் சென்னை, மதுரை காமராஜ் பல்கலை சார்பில் 'யூத் பார்லிமென்ட்' போட்டி நடந்தது.
150 மாணவர்கள் பங்கேற்ற போட்டியில் முதல் 10 இடங்களில் சந்தியா, பிரிஜேஸ்ராஜ், சஞ்சய், ஜோதிகா, சாய்கார்த்திக், இம்மானுவேல், ஹரிஹரன், ஹரிஷ், நந்தகுமார், ஆதித்யா பாண்டியன் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.