/உள்ளூர் செய்திகள்/மதுரை/ முதல்வரை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம் முதல்வரை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்
முதல்வரை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்
முதல்வரை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்
முதல்வரை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 23, 2025 04:52 AM

மதுரை : தமிழகத்தை வஞ்சித்து வரும் கேரளா முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமாருக்கு சிவப்பு கம்பள வரவேற்பளித்த முதல்வர் ஸ்டாலினை கண்டித்து மதுரையில் பா.ஜ., சார்பில் கறுப்பு கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிழக்கு மாவட்டத் தலைவர் ராஜசிம்மன், நகர் தலைவர் மாரி சக்கரவர்த்தி, மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம், பார்வையாளர் ராஜரத்தினம், ஐ.டி., பிரிவு மாநில செயலாளர்விஷ்ணு பிரசாத், மாவட்ட பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், தேசிய பொதுக் குழு உறுப்பினர் மகாலட்சுமி உள்ளிட்டோர்வீடுகளில் கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ்.எஸ்.காலனி பகுதியில் விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர் சசிராமன், மண்டலத் தலைவர் தினேஷ் பாபு, நிர்வாகிகள் தமிழ்ச் செல்வன், ஜெயராமன், சித்ரா, புலவர் பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பழங்காநத்தம் பகுதியில் பெருங் கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட துணைத் தலைவர்கள் சத்தியம் செந்தில், செல்வகுமார், முன்னாள் துணைத் தலைவர்கள் கராத்தே ராஜா, என்.ஏ.செல்வகுமார், அரசு தொடர்பு பிரிவு செயலாளர் சதீஷ்குமார், மண்டல நிர்வாகிகள் சாமி, பிரகாஷ், குமாரி திருமலை, ராமசாமி, கண்ணதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பாலை மண்டலம் ஆத்திகுளம் 13வது வார்டில், ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் நாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட அலுவலக செயலாளர் ஹரி கிருஷ்ணன், ஆன்மிகப் பிரிவு துணைத் தலைவர் போதிலட்சுமி ஏற்பாடுகளை செய்தனர். துரைசாமி, முகமத் பேகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலுார்: கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமையில் நிர்வாகிகள் சேவுகமூர்த்தி, கண்ணன், செந்தில் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பரங்குன்றம்: நிர்வாகிகள் வேல்முருகன், கோபாலகிருஷ்ணன், பாண்டியராஜன், முருகன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.