Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நடைபாதையில் தி.மு.க.,கவுன்சிலர் அலுவலகம் குடியிருப்போர் சங்கம் எதிர்ப்பு

நடைபாதையில் தி.மு.க.,கவுன்சிலர் அலுவலகம் குடியிருப்போர் சங்கம் எதிர்ப்பு

நடைபாதையில் தி.மு.க.,கவுன்சிலர் அலுவலகம் குடியிருப்போர் சங்கம் எதிர்ப்பு

நடைபாதையில் தி.மு.க.,கவுன்சிலர் அலுவலகம் குடியிருப்போர் சங்கம் எதிர்ப்பு

ADDED : மார் 24, 2025 05:18 AM


Google News
மதுரை: மதுரை மாநகராட்சி 70 வது வார்டு வேல்முருகன்நகர் தாமிரபரணி தெருவில் மக்கள் பயன்படுத்தும் நடைபாதையை ஆக்கிரமித்து தி.மு.க., கவுன்சிலர் அலுவலகம் கட்டுவதற்கு அப்பகுதிகுடியிருப்போர் நலச்சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தாமிரபரணி தெருவில் உள்ள பிரதான நடைபாதையை இப்பகுதி மக்கள் 15 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். குழந்தைகள் விளையாடுவதற்கும், நடைப்பயிற்சி செல்வதற்கும் இப்பகுதி பயன்பட்டு வருகிறது. இந்நிலையில் 70 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் தவமணி நடைபாதையை ஆக்கிரமித்து கவுன்சிலர் அலுவலகம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக குடியிருப்போர் நல சங்கம் சார்பில் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு பெற்ற பின்னரும் அலுவலகம் கட்டும் பணி துவங்கும் நிலையில் உள்ளது.

குடியிருப்போர் நலசங்க சோமன்பாபு கூறியதாவது: இந்த வார்டில் உள்ள துரைசாமி நகர், வானமாமலை நகர், வேல்முருகன் நகர், நமச்சிவாயம் நகர், நேரு நகர் பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான பல இடங்கள் முட்புதர்களுடன் பராமரிக்கப்படாமல் உள்ளன. அவற்றில் ஏதாவது ஓரிடத்தில் அலுவலகம் கட்டலாம். அலுவலகத்திற்கு வேறு இடம் தருவதாக குடியிருப்போர் சங்கம் தெரிவித்தும் கவுன்சிலர் கேட்பதாக இல்லை. இதுகுறித்து கமிஷனர் சித்ராவிடம் மனு அளித்துள்ளோம். விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கவுன்சிலர் அமுதா தவமணி கூறுகையில், வார்டில் மாநகராட்சிக்கு சொந்தமாக 33 ஓ.எஸ்.ஆர்., இடங்கள் உள்ளன. இவற்றில் ஒன்றுதான் தாமிரபரணி தெருவில் அலுவலகம் தேர்வு செய்யப்பட்ட இடம். வார்டின் மையப் பகுதி என்பதால் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் இதுவரை மினி மருத்துவமனை, ரேஷன் கடை என எந்த திட்டம் வந்தாலும் அதை சிலர் தடுக்கின்றனர். உரிய விதிமுறை பின்பற்றி அலுவலகம் கட்டப்படும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us