/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அபராத தேதி மாற்ற நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் வலியுறுத்தல் அபராத தேதி மாற்ற நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் வலியுறுத்தல்
அபராத தேதி மாற்ற நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் வலியுறுத்தல்
அபராத தேதி மாற்ற நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் வலியுறுத்தல்
அபராத தேதி மாற்ற நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் வலியுறுத்தல்
ADDED : மார் 24, 2025 05:17 AM
மதுரை: மதுரை மாவட்ட நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க ஆண்டு விழா தலைவர் மாதவன் தலைமையில் நடந்தது. செயலாளர் வினோத் கண்ணா வரவேற்றார்.
தயாரிப்பு நிறுவனங்களுடன், விநியோகஸ்தர்கள் கலந்துரையாடும் 'பிடூபி' ஸ்டாலை தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் திறந்து வைத்தார். வியாபாரிகள் சங்கத் தலைவர் வேல்சங்கர் விழாவை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்கள் வழக்கறிஞர் நாகராஜன், ஆடிட்டர் முகம்மது கான் ஜி.எஸ்.டி., வருமானவரி குறித்து பேசினர். துணைத் தலைவர்கள் கணேசன், வெங்கடாஜலபதி, பாபு, இணைச் செயலாளர்கள் தனசேகரன், ராஜாமுத்துக்குமார், கேசவராஜ், ராமச்சந்திரன், ஆலோசகர்கள் ராமகிருஷ்ணன், பால்ராம், பாலாஜி பங்கேற்றனர்.
கூட்ட தீர்மானங்கள்
ஒரே நாடு ஒரே வரி என்று அமல்படுத்திய ஜி.எஸ்.டி., 5 முதல் 28 சதவீதம் வரை உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மூன்று கட்ட வரியை நடைமுறைப்படுத்தினால் வரிஏய்ப்பு குறையும். அத்தியாவசியபொருட்களுக்கு சதவீத வரி விலக்கு வேண்டும். 2017 -- 2020ம் ஆண்டுக்கான நிலுவைத் தொகை, அபராதம் செலுத்த அறிவித்தி மார்ச் 31 கடைசி தேதியை ஜூன் 30க்கு நீட்டிக்க வேண்டும்.
சில்லரை வணிகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆன்லைனில் சலுகை விலையில் விற்பதால் சிறுநிறுவனங்கள் பாதிப்படைகின்றன. மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வினியோகஸ்தர்களை பாதுகாக்க வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் வெங்கடசுப்பிரமணியன் நன்றி கூறினார்.