ADDED : ஜன 05, 2024 05:19 AM
மதுரை : மதுரை அண்ணாநகரில் பா.ஜ., சிறுபான்மை பிரிவு சார்பில் காசநோய் இல்லாத இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மாநில பொதுச் செயலாளர் பஷீர்அகமது காசநோயாளிகளுக்கு புரதச்சத்து பெட்டகத்தை வழங்கினார். வண்டியூர் ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் ராஜா, ஆய்வாளர் ராஜாராம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் மாரி சக்கரவர்த்தி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஆனந்த், மாவட்ட செயலாளர் டேனியல் சேகர், நிர்வாகிகள் விமல், பாலசுப்ரமணியம், ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.