அமெரிக்கா தாக்கிய அடுத்த நாளே மோதல் தீவிரம்: ஈரான் தாக்குதலால் இஸ்ரேல் முழுவதும் ஒலித்த சைரன் சத்தம்!

பாலிஸ்டிக் ஏவுகணை
ஈரானில் தயார் நிலையில் இருந்த பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளங்களை குறி வைத்து இஸ்ரேல் குண்டு வீசியது. அதுமட்டுமின்றி, ஈரானின் போர்டோ அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் படையினர் தரைவழி தாக்குதல் நடத்தி உள்ளனர் என ஈரான் அரசு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ஒலிக்கும் சைரன்கள்!
குறிப்பாக ஜெருசலேமில் வெடிச்சத்தங்கள் கேட்டன. ஈரானில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதால் நாடு முழுவதும் சைரன்கள் ஒலித்தன. ஈரானின் புதிய ஏவுகணை தாக்குதலை, உறுதி செய்த இஸ்ரேல் ராணுவம், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுமாறு அறிவுறுத்தி உள்ளது.
அதிகரிக்கும் உயிரிழப்புகள்!
இதுவரை ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலியர்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அதே நேரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானியர்கள் 850க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். 1500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.