/உள்ளூர் செய்திகள்/மதுரை/பிரதமர் மோடி தமிழகம் வருகை பா.ஜ., தலைவர் ஆலோசனைபிரதமர் மோடி தமிழகம் வருகை பா.ஜ., தலைவர் ஆலோசனை
பிரதமர் மோடி தமிழகம் வருகை பா.ஜ., தலைவர் ஆலோசனை
பிரதமர் மோடி தமிழகம் வருகை பா.ஜ., தலைவர் ஆலோசனை
பிரதமர் மோடி தமிழகம் வருகை பா.ஜ., தலைவர் ஆலோசனை
ADDED : ஜன 01, 2024 05:42 AM
மதுரை: திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையத்தை (டெர்மினல்) திறந்து வைக்க நாளை பிரதமர் மோடி தமிழகம் வருவதைத் தொடர்ந்து பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தகவல் தொழில்நுட்ப பிரிவினருடன் வீடியோ கான்பரன்சிங்கில் ஆலோசனை நடத்தினார்.
இதில் மாநில பார்வையாளர் அர்ஜூனமூர்த்தி, ஐ.டி.விங்க் துணைத் தலைவர் பாலாஜி, பொதுச் செயலாளர் விஷ்ணுபிரசாத், டேட்டா மேனேஜ்மென்ட் அமைப்பாளர் மகேஷ்குமார், மதுரை கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்க பெருமாள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஐ.டி.,விங்கில் பணியாற்றுபவர்கள், பிரதமர் வருகையை பிரபலமாக்க ேஹஷ்டேக்குகளை உருவாக்கி 20 லட்சத்திற்கும் மேலானோர் பார்வையிடும் வகையில் செயல்பட வேண்டும். தமிழகத்தின் மீது மோடிக்கு உள்ள அன்பு, தமிழக மக்கள் மோடி மீது கொண்டுள்ள ஆர்வம், சமீபகாலமாக நடத்தி வரும் என் மண் என் மக்கள்' யாத்திரையின் எழுச்சி, பா.ஜ.,வுக்கு மக்களுக்கான ஆதரவு போன்றவற்றை விட்டுக் கொடுக்காத வகையில் பிரபலமாக்க வேண்டும் என அண்ணாமலை ஆலோசனை வழங்கியுள்ளார்.