/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பலத்த காற்றுக்கு 'ஷாக்' தந்த மின்கம்பிகள் பலத்த காற்றுக்கு 'ஷாக்' தந்த மின்கம்பிகள்
பலத்த காற்றுக்கு 'ஷாக்' தந்த மின்கம்பிகள்
பலத்த காற்றுக்கு 'ஷாக்' தந்த மின்கம்பிகள்
பலத்த காற்றுக்கு 'ஷாக்' தந்த மின்கம்பிகள்
ADDED : ஜூன் 16, 2025 12:16 AM
மதுரை: உலக காற்று தினமான நேற்று மதுரை முழுவதும் பலத்த காற்று வீசியது. பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் விழுந்தும், மின் கம்பிகள் உரசி மின் இணைப்புகள் 'கட்' ஆயின.
பசுமலையில் இருந்து அரசரடிக்கு பழங்காநத்தம் வழியாக உயர்மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன. மாடக்குளம் பெரியார் நகர் குறுக்கு தெருவில் செல்லும் இந்த கம்பி, பலத்த காற்றால் வீடுகளின் சுவற்றில் உரசி பலத்த வெடி சத்தம் போல் கேட்டது. சில வீடுகளில் மின்சாதன பொருட்கள் பழுதாயின. தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் கம்பிகளை பழுதை சரிசெய்தனர்.
மதுரை ஓபுளா படித்துறை பாலம் பகுதியில் காற்றுக்கு பேரிக்காடு அவ்வழியே டூவீலரில் சென்ற தம்பதி மீது விழுந்தது. நல்லவேளையாக காயமின்றி தப்பினர்.