/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உசிலம்பட்டி தொகுதி எப்போதும் அ.தி.மு.க.,வுக்கு தான் உதயகுமார் உறுதி உசிலம்பட்டி தொகுதி எப்போதும் அ.தி.மு.க.,வுக்கு தான் உதயகுமார் உறுதி
உசிலம்பட்டி தொகுதி எப்போதும் அ.தி.மு.க.,வுக்கு தான் உதயகுமார் உறுதி
உசிலம்பட்டி தொகுதி எப்போதும் அ.தி.மு.க.,வுக்கு தான் உதயகுமார் உறுதி
உசிலம்பட்டி தொகுதி எப்போதும் அ.தி.மு.க.,வுக்கு தான் உதயகுமார் உறுதி
ADDED : ஜூன் 16, 2025 12:16 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே எ.கன்னியம்பட்டியில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு 100 கோயில்களில் வழிபாடு, 100 நாட்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வில் சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் பங்கேற்றார்.
அவர் கூறியதாவது: பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. செல்லம்பட்டி அருகே போலீஸ்காரர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்டார். ஒருவர் தாக்கப்பட்டால் போலீசில் புகார் அளிக்கலாம். போலீஸ் ஸ்டேஷனையே தாக்கினால் எங்க போய் புகார் அளிப்பது. போலீஸ் துறையை கையில் வைத்துள்ள முதல்வர் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்.
உதயநிதியை மக்களிடத்தில் கொண்டு செல்வதற்காக சுற்றுப்பயணம் வருகிறார்கள். 4 ஆண்டுகளில் செய்ய முடியாததை இனிமேல் இருக்கும் 6 மாதங்களில் எப்படி செய்ய முடியும். விளம்பரத்திற்காக ஊர் உலகத்தை சுற்றி வருவது மக்களுக்கு எந்த பலனும் தராது. 'தி.மு.க., ஏன் ஒரு முறை கூட உசிலம்பட்டியில் வெற்றி பெறவில்லை' என கட்சியினரிடம் ஸ்டாலின் கேட்டுள்ளார்.
உசிலம்பட்டி தொகுதியில் இரட்டை இலையை நேசிக்கிற மக்கள் உள்ளனர். 52 ஆண்டுகளில் இத்தொகுதியில் வெற்றி பெற்று வருகிறது. இனிமேலும் வெற்றி பெறும். எத்தனை முறை' உடன்பிறப்பே வா' என்று ஸ்டாலின் அழைத்தாலும் தலைமைக்கும் தொண்டர்களுக்கும் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.