ADDED : ஜூன் 16, 2025 12:17 AM
கோயில்
ஆனி மாத முதல் சோமவாரம் - சிறப்பு பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:30 மணி.
மாதாந்திர அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு மஹா பெரியவர் விக்ரகத்திற்கு அபிஷேகம்: காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, மாலை 5:00 மணி, சிவானந்த லஹரி சொற்பொழிவு நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, மாலை 6:30 மணி.
ஆண்டு பெருவிழா: பதுவை புனித அந்தோணியார் சர்ச், கரிமேடு, மதுரை, சமபந்தி விருந்து, மதியம் 12:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, திருவள்ளுவர் மன்றம், பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மாலை 5:00 மணி.
சதஸ்லோகி: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரி
'இசைபட வாழ்வோம்' - கருத்தரங்கு: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், தலைமை: முதல்வர் கார்த்திகேயன், ஆசியுரை: செயலாளர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மானந்த, சிறப்புரை: இசை ஆசிரியர் உமா சங்கர், மாலை 6:30 மணி.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு துவக்க விழா: லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லுாரி, கிடாரிப்பட்டி, சிறப்பு விருந்தினர்: குழுமம் சேர்மன் மாதவன், காலை 10:00 மணி.
பாவேந்தர் இலக்கிய மன்றம் ஆண்டு விழா: விருதுநகர் ஹிந்து நாடார் பள்ளி, பழைய குயவர்பாளையம் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: மதுரை இலக்கியப் பேரவை நிறுவனர் சண்முக திருக்குமரன், மதியம் 2:45 மணி.
உலக அமைதிக்கான வழிமுறைகள் - கருத்தரங்கு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் தேன்மொழி, சிறப்பு விருந்தினர்: எத்தியோப்பியா பேராசிரியர் சேனாபதி, ஏற்பாடு: காந்தி மியூசியம், காலை 10:30 மணி.
பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஊக்கமூட்டுதல் மற்றும் வேலை வாய்ப்பு திறன் குறித்த சிறப்பு கருத்தரங்கு: சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் குமரேஷ், பேசுபவர்: டீன் கவிதா, மதியம் 12:30 மணி.
திறன் மேம்பாட்டு பயிற்சி: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ஸ்ரீனிவாசன், பேசுபவர்கள்: செயலாளர் குமரேஷ், இன்போசிஸ், உன்னதி பவுண்டேஷன் பயிற்சியாளர் ஸ்ரீ லதா, காலை 9:30 மணி.
பொது
முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை அருட்காட்சி திறப்பு விழா: அம்மா திடல், பாண்டி கோயில் அருகில், மதுரை, பங்கேற்பு: மத்திய அமைச்சர் முருகன், புதுச்சேரி அமைச்சர் நமசிவாயம், ஏற்பாடு: ஹிந்து முன்னணி, காலை 9:00 மணி.
போக்குவரத்து போலீசாருக்கு கூலிங்கிளாஸ் வழங்குதல்: கட்டபொம்மன் சிலை அருகில், பெரியார் பஸ் ஸ்டாண்ட், மதுரை, பங்கேற்பு: கமிஷனர் லோகநாதன், ஏற்பாடு: போக்குவரத்து போலீசார், ராமச்சந்திரா கண் மருத்துவமனை, காலை 10:00 மணி.
விடுதலைப் போராட்ட வீரர் விஸ்வநாததாஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்தல்: தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லம், திருமங்கலம், பங்கேற்பு: கலெக்டர் சங்கீதா, காலை 9:30 மணி.
கண்காட்சி
அரசு பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்பு துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.