மதுரையில் பொங்கல் விழா கொண்டாட்டம்
மதுரையில் பொங்கல் விழா கொண்டாட்டம்
மதுரையில் பொங்கல் விழா கொண்டாட்டம்
பள்ளி, கல்லுாரி
* வேடர்புளியங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் தென்கரை முத்துப்பிள்ளை தலைமையில் கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பரிசு வழங்கினர். ஆசிரியைகள் இந்துமதி, நாகேஸ்வரி, கலைமதி, விஜயசாரதி ஏற்பாடு செய்தனர். உழவர் தினம், திருவள்ளுவர் தினம் குறித்து ஆசிரியை சாந்தி விளக்கினார்.
திருப்பரங்குன்றம்
* சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் பொங்கல் விழா நடந்தது. செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர்கள் ராமசுப்ரமணியன், வெங்கடேஷ், முதல்வர் மௌஷமி துறைத்தலைவர்கள் உமாமகேஸ்வரி, விஜயலட்சுமி, மஞ்சுளா, மேகலா, ரோகிணி, ரேணுகாதேவி, கார்த்திகா தேவி, பேராசிரியர்கள், மாணவியர் கலந்து கொண்டனர். பல்வேறு போட்டிகள் நடந்தன.
உசிலம்பட்டி
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழாவில் கண்காணிப்பாளர் மணிவண்ணன், நிலைய மருத்துவ அலுவலர் மாதவன், செவிலியர் கண்காணிப்பாளர் கமலா, டாக்டர் அப்துல் பாரி மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் பங்கேற்றனர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரியில் முதல்வர் ஜோதிராஜன் தலைமையில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
திருமங்கலம்
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில் ஒன்றிய தலைவர் லதா தலைமையில் கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் பொங்கல் வைத்தனர். இதில் துணைத் தலைவர் வளர்மதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர் கைலாசம், பாண்டியன், கவுன்சிலர்கள் ஆண்டிச்சாமி, மின்னல் கொடி, செல்வம், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மேலுார்
ஆட்டுக்குளம் ஸ்ரீ சுந்தரேஸ்வரா வித்யாசாலா பள்ளி பொங்கல் விழாவில் நீதிபதி கணேசன், தாசில்தார் செந்தாமரை, டாக்டர் ரேவதி, தாளாளர்கள் பாக்கியம், சுதா நாகேஸ்வரன், முதல்வர் கண்ணன் பங்கேற்றனர். நீதிமன்றத்தில் நீதிபதிகள் முத்துகிருஷ்ணமுரளிதாஸ், கோகுலகிருஷ்ணன், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜெயராமன், செயலாளர் சுரேந்தர், பொருளாளர் மேசுவர்ணன், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.