வயநாடு நிலச்சரிவு: இரங்கல் செய்தி அனுப்பினார் சீன பிரதமர்
வயநாடு நிலச்சரிவு: இரங்கல் செய்தி அனுப்பினார் சீன பிரதமர்
வயநாடு நிலச்சரிவு: இரங்கல் செய்தி அனுப்பினார் சீன பிரதமர்
UPDATED : ஆக 04, 2024 06:19 PM
ADDED : ஆக 04, 2024 04:34 PM

புதுடில்லி: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 308 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து சீன பிரதமர் லி கியாங், பிரதமர் மோடிக்கு செய்தி அனுப்பி உள்ளார்.
இது தொடர்பாக இந்தியாவிற்கான சீனதூதர் ஷியு பெயிகோங் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: மோடிக்கு, கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு இரங்கல் தெரிவித்து லி கியாங் செய்தி அனுப்பி உள்ளார். அதில், கேரளாவில் ஏற்பட்ட பேரழிவில் பலர் உயிரிழந்துள்ள செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்திற்கு சீன அரசு சார்பில் இரங்கல் தெரிவிக்கிறேன் எனக்கூறியுள்ளார்.