ADDED : பிப் 06, 2024 07:31 AM

கள்ளிக்குடி : கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் உலகாணியில் மந்தை அருகில் திருமண மண்டபம் உள்ளது.
இதன் வாயிலில் 30 அடி சுற்றளவு கொண்ட கிணறு உள்ளது. கம்பி வலை போட்டு மூடப்பட்டுள்ள போதும் அதில் உள்ள இடைவெளியில் ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் பாட்டில்களை பொதுமக்கள் போட்டு வைத்துள்ளனர். இதனால் தண்ணீர் கெட்டுப் போய் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்களின் பிறப்பிடமாகவும் உள்ளது. அருகில் உள்ள ஆழ்துளை கிணறுகளின் போர்வெல் தண்ணீரும் கெடும் சூழல் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் கிணற்றை சுத்தம் செய்து தண்ணீரை பாதுகாக்க வேண்டும்.