நீங்க ரொம்ப லேட்டுங்க; பஞ்சாப் முதல்வரின் பாரிஸ் பயணத்துக்கு வேட்டு!
நீங்க ரொம்ப லேட்டுங்க; பஞ்சாப் முதல்வரின் பாரிஸ் பயணத்துக்கு வேட்டு!
நீங்க ரொம்ப லேட்டுங்க; பஞ்சாப் முதல்வரின் பாரிஸ் பயணத்துக்கு வேட்டு!
ADDED : ஆக 03, 2024 12:21 PM

புதுடில்லி: ஒலிம்பிக் போட்டிகளை காண பாரிஸ் செல்ல திட்டமிட்டிருந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்து விட்டது.
பாரிசில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஒலிம்பிக் வரலாற்றில் 52 ஆண்டுக்கு பின் இந்திய ஹாக்கி அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்தது. நாளை (ஆகஸ்ட் 4) இந்திய ஹாக்கி அணி விளையாட உள்ள காலிறுதிப் போட்டியை நேரில் காண பகவந்த் மான் திட்டமிட்டு இருந்தார்.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 03) தாமதமாக விண்ணப்பம் அளித்ததை காரணம் காட்டி பகவந்த் மான் பிரான்ஸ் செல்வதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. மான் கூறுகையில், ''இந்திய ஒலிம்பிக் அணியில், பஞ்சாப் வீரர்கள் மட்டும் 19 பேர் உள்ளனர். ஹாக்கி அணியில் இருக்கும் வீரர்களில் 10 பேர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இந்திய அணி, வலு மிகுந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஹாக்கியில் புதிய சரித்திரம் படைத்துள்ளது.
அனுமதி மறுப்பு
இத்தகைய சூழ்நிலையில் தான், இந்திய அணி கால் இறுதியில் விளையாடுவதை நேரில் பார்க்க அனுமதி கோரி விண்ணப்பம் தரப்பட்டது. அதற்கு அனுமதி மறுத்து விட்டனர். இதேபோல 2022ல் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதி கேட்டபோதும் மத்திய அரசு மறுத்து விட்டது. ஒவ்வொரு பிரச்னைக்கும் நாங்கள் கோர்ட்டுக்கு செல்லட்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களா,'' என்றார்.