Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/‛மகாத்மா காந்தியின் கருத்துக்களே நமது சித்தாந்தம் நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் பேச்சு

‛மகாத்மா காந்தியின் கருத்துக்களே நமது சித்தாந்தம் நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் பேச்சு

‛மகாத்மா காந்தியின் கருத்துக்களே நமது சித்தாந்தம் நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் பேச்சு

‛மகாத்மா காந்தியின் கருத்துக்களே நமது சித்தாந்தம் நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் பேச்சு

ADDED : ஜன 03, 2024 06:29 AM


Google News
Latest Tamil News
மதுரை: ''மகாத்மா காந்தியின் கருத்துக்களே நம்முடைய சித்தாந்தமாக உள்ளது'' என்று மதுரையில் நடந்த 'தாத்தா தந்த கண்ணாடி'' நுால் வெளியீட்டு விழாவில் நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் பேசினார்.

பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ராம.ஸ்ரீனிவாசன் 'தாத்தா தந்த கண்ணாடி' என்ற நுாலை எழுதியுள்ளார். இந்நுாலை நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் வெளியிட, வேலம்மாள் கல்விக்குழும தலைவர் முத்துராமலிங்கம் பெற்றார். இந்நிழ்ச்சியில் டாக்டர்கள் புகழகிரி, ராமசுப்ரமணியம், அன்னை பாத்திமா கல்லுாரி நிறுவனர் எம்.எஸ்.ஷா, மடீட்சியா முன்னாள் தலைவர் மணிமாறன், எழுத்தாளர் பிரபாகர், மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சசிகுமார், நேரு யுவகேந்திரா இயக்குனர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

கவர்னர் இல.கணேசன் பேசியதாவது: இந்நுாலில் கூறியுள்ள சோஷியலிசம், மதச்சார்பின்மை, முதலாளித்துவம் நமக்குப் புதிதல்ல. ஏற்கனவே இங்கு நாம் கடைபிடிப்பதே, புதிய தோற்றத்தில் வந்துள்ளது என்று காந்திய கருத்தை மேற்கோள் காட்டிக் கூறியுள்ளார்.

அடுத்து ஆர்.எஸ்.எஸ்., பற்றியது. ஒருமுறை டிவி விவாதத்தின்போது என் பக்கத்தில் இருந்த காங்.,பிரமுகர், ''நீங்கள் காந்தியை கொன்றவர்கள்'' எனக் குற்றம் சாட்டினார். நான், 'காந்தியை அவமானப்படுத்தாதீங்க'' என்றேன். அவருக்கு புரியாததால், 'எப்படிச் சொல்கிறீர்கள்' என்று கேட்டார்.

'நான் சார்ந்த இயக்கம் வளர்ந்து ஆட்சிக்கு வந்துவிட்டது. அதனால் காந்தியை கொன்றது சரியென பாரதநாடு கருதுகிறது என்ற முடிக்கு வெளிநாட்டவர் வந்தால் யாருக்கு அவமானம், என்றேன்.

அதன்பின் அவர், 'நான் இனி ஆர்.எஸ்.எஸ்., காந்தியை கொன்ற இயக்கம் என்று சொல்லமாட்டேன்' என்றார்.

இந்த நுால் மூலமாக, நாட்டில் உள்ள பல்வேறு சித்தாந்தங்கள் குறித்து காந்தியின் கண்ணோட்டம் என்ன என்பதை விளக்குகிறார். அதன் மூலம் அதே கருத்தைத்தானே நாங்களும் கொண்டுள்ளோம் என்றும் குறிப்பிடுகிறார். மகாத்மா காந்தியின் கருத்துகள் சாசுவதமானது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக நுாலாசிரியர் ராம.ஸ்ரீனிவாசன் பேசுகையில், ''இந்த நாட்டில் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ்., அதேபோல தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒருவர் மகாத்மா காந்தி. அவரை சரியாக புரிந்து கொள்ளாமல் ஒரு தலைமுறையே உருவாகி இருக்கிறது. எனக்கு அவரைப் பற்றிய புரிதல் உள்ளதால், காந்தியவாதிகள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ்., காரனாகவும், ஆர்.எஸ்.எஸ்.,காரர்கள் மத்தியில் காந்தியவாதியாகவும் உள்ளேன். அதனால் நீங்கள் காந்தியை மறுவாசிப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us