/உள்ளூர் செய்திகள்/மதுரை/கபடி வீரர் குடும்பத்துக்கு காப்பீடு தொகைகபடி வீரர் குடும்பத்துக்கு காப்பீடு தொகை
கபடி வீரர் குடும்பத்துக்கு காப்பீடு தொகை
கபடி வீரர் குடும்பத்துக்கு காப்பீடு தொகை
கபடி வீரர் குடும்பத்துக்கு காப்பீடு தொகை
ADDED : ஜன 01, 2024 05:40 AM
சிலைமான்; மதுரை வண்டியூரை சேர்ந்த சரவணக்குமார் பொறியாளராக பணியாற்றி வருகிறார். மாநில கபடி போட்டியில் பங்கேற்று பல பரிசுகளை வென்றவர்.
பொள்ளாச்சி அருகே அக்., 9 ல் டூவீலர் விபத்தில் இறந்தார். அவருக்கு தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில் விளையாட்டு வீரர்கள் ஊர்வலமாக வந்து அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை அமெச்சூர் கபடி கழக மாநிலத்தலைவர் சோலை ராஜா, வேலம்மாள் முருத்துவமனை தலைமை செயல் அதிகாரி மணிவண்ணன், இன்சூரன்ஸ் கிளை மேலாளர் பாலமுருகன், பொதுநல காப்பீட்டு அதிகாரி தாயுமானசுந்தரம் ஆகியோர் இறந்த வீரரின் தந்தை பாலமுருகனிடம் வழங்கினர்.