அயோத்தியை போல் குஜராத்திலும் பா.ஜ.,வை தோற்கடிப்போம்: ராகுல் சபதம்
அயோத்தியை போல் குஜராத்திலும் பா.ஜ.,வை தோற்கடிப்போம்: ராகுல் சபதம்
அயோத்தியை போல் குஜராத்திலும் பா.ஜ.,வை தோற்கடிப்போம்: ராகுல் சபதம்

தோற்கடிப்போம்
அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பா.ஜ.,வை தோற்கடித்தது போல் குஜராத்திலும் பா.ஜ.,வை தோற்கடிப்போம். லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி பைசாபாத் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவர் தோற்கடிக்கப்படுவார். அவரது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும் என அவரது அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனால் அவர் பைசாபாத் தொகுதியில் போட்டியிடவில்லை.
இழப்பீடு வழங்கவில்லை
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, ஏழை மக்களிடம் இருந்து ஏராளமான நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளது. இன்று வரை நரேந்திர மோடி அரசு அவர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இரண்டாவதாக, விவசாயிகளின் நிலத்தில் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டது. அவர்களுக்கு உரிய இழப்பீடு கூட வழங்கப்படவில்லை. இது மக்களை கொதிப்படையச் செய்தது.
பயப்பட வேண்டாம்
அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியடைந்ததற்கும், இண்டியா கூட்டணி வெற்றி பெறுவதற்கும் இவையே காரணம். குஜராத்தில் எங்கள் அலுவலகத்தை பா.ஜ.,வினர் அடித்து நொறுக்கி, எங்கள் ஊழியர்களைத் தாக்கியுள்ளனர். இப்போது காங்கிரசார் யாருக்கும் பயப்பட வேண்டாம். இவ்வாறு ராகுல் பேசினார்.
வீடியோ வெளியிட்டு ராகுல் வருத்தம்
கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ரயில் ஓட்டுநர்களை சந்தித்தது தொடர்பாக, வீடியோ ஒன்றை ராகுல் எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அவர் கூறியிருப்பதாவது: நரேந்திர மோடியின் ஆட்சியில் தெருவோர வியாபாரிகள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்கள் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். ஒரு நாள் சம்பளத்தில் நான்கு நாட்கள் தங்கள் குடும்பத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் ஒரு பைசா கூட சேமிக்காமல் வாழ்க்கையை கழிக்கின்றனர்.