/உள்ளூர் செய்திகள்/மதுரை/மோசடி நிறுவன சொத்து முடக்கப்பட்டதா எஸ்.பி.,ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவுமோசடி நிறுவன சொத்து முடக்கப்பட்டதா எஸ்.பி.,ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
மோசடி நிறுவன சொத்து முடக்கப்பட்டதா எஸ்.பி.,ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
மோசடி நிறுவன சொத்து முடக்கப்பட்டதா எஸ்.பி.,ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
மோசடி நிறுவன சொத்து முடக்கப்பட்டதா எஸ்.பி.,ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜன 11, 2024 04:46 AM
மதுரை : மோசடி வழக்கில் நியூ ரைஸ் ஆலயம் நிதி நிறுவன சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு தென்மண்டல எஸ்.பி.,ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
நியூ ரைஸ் ஆலயம் நிதி நிறுவனம், பர்னிச்சர், மெட்டல் மார்ட், ஜூவல்லர்ஸ், டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களை ராஜா என்பவர் துவக்கினார். மக்களிடம் டிபாசிட் வசூலிக்கப்பட்டது. தொகையை திருப்பித்தராமல் மோசடியில் ஈடுபட்டதாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 2022 ல் வழக்கு பதிந்தனர்.
இவ்வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கே.வலசையை சேர்ந்த சுரேஷ் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு: நிறுவனத்தில் மனுதாரர் மேலாளராக நியமிக்கப்பட்டார். சம்பளம் பெற்றார். அதிக டிபாசிட் செய்தால் சம்பள உயர்வு கிடைக்கும் என மனுதாரருக்கு ஆசை வார்த்தை கூறப்பட்டது. இதை நம்பிய மனுதாரர் ரூ.26 லட்சம் டிபாசிட் செய்தார். 2810 பேரிடமிருந்து நிறுவனம் அதிக தொகையை வசூலித்தது. திருப்பித் தரவில்லை. விசாரணை அதிகாரி உரிய முறையில் வழக்கை விசாரிக்கவில்லை. முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்.
அரசு தரப்பு: தற்போது வரை நிறுவனத்தின் 82 சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை முடக்கவில்லை. மனுதாரர் நிறுவனத்தின் இயக்குனர். நிறுவனத்தின் அன்றாட விவகாரங்களில் ஈடுபட்டு, 200 பேரிடமிருந்து ரூ.8 கோடி டிபாசிட் வசூலித்துள்ளார். முன்ஜாமின் அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி: நிறுவனம் 2810 டிபாசிட்தாரர்களிடமிருந்து ரூ.300 கோடி வசூலித்துள்ளது. 2022 ஆக.,23 ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஓராண்டு கடந்த பிறகும் நிறுவன சொத்துக்களை போலீசார் முடக்கவில்லை. விசாரணை அதிகாரியின் மெத்தனப் போக்கை கருத்தில் கொண்டு, வழக்கு விசாரணையை கண்காணிக்க பொருளாதார குற்றப்பிரிவு தென்மண்டல எஸ்.பி.,யை நியமிக்க இந்நீதிமன்றம் விரும்புகிறது.
சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதா, இல்லையா என்பது குறித்து எஸ்.பி.,-பிப்.,15ல் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பொருளாதார குற்றப்பிரிவு மதுரை டி.எஸ்.பி.,யும் அன்று ஆஜராக வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.