ADDED : ஜூன் 11, 2025 05:36 AM
உசிலம்பட்டி: சீமானுாத்து கிராமத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உசிலம்பட்டி தொகுதிக்கான ரூ. 3 கோடி மதிப்பில் மினி ஸ்டேடியம் அமைக்க பூமி பூஜை நடந்தது.
கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார். அமைச்சர் மூர்த்தி, எம்.பி., தங்கதமிழ்ச்செல்வன், ஆர்.டி.ஓ., சண்முகவடிவேல், தாசில்தார் பாலகிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, தி.மு.க., மாவட்டச் செயலாளர் மணிமாறன், நகர் செயலாளர் தங்கப்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் உசிலம்பட்டி அஜித்பாண்டி, பழனி, முருகன் பங்கேற்றனர்.
தடகளம், வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து, கபடி, கோ-கோ விளையாட்டு வசதிகள் உடை மாற்றும் அறை, பார்வையாளர் காலரிகளுடன் அமைக்கப்பட உள்ளது.