Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/20 லிட்டர் 'வாட்டர் கேன்' சுத்தமாக இருந்தால் குடி... குடியை காக்கும்! தண்ணீரின் தரம் குறைந்தாலும் புகார் செய்யலாம்

20 லிட்டர் 'வாட்டர் கேன்' சுத்தமாக இருந்தால் குடி... குடியை காக்கும்! தண்ணீரின் தரம் குறைந்தாலும் புகார் செய்யலாம்

20 லிட்டர் 'வாட்டர் கேன்' சுத்தமாக இருந்தால் குடி... குடியை காக்கும்! தண்ணீரின் தரம் குறைந்தாலும் புகார் செய்யலாம்

20 லிட்டர் 'வாட்டர் கேன்' சுத்தமாக இருந்தால் குடி... குடியை காக்கும்! தண்ணீரின் தரம் குறைந்தாலும் புகார் செய்யலாம்

ADDED : ஜூன் 11, 2025 05:38 AM


Google News
Latest Tamil News
மதுரை: மதுரையில் 'பேக்கேஜ் குடிநீர்' எனப்படும் 20 லிட்டர் கேன்களை கவனமாக பார்த்து வாங்க வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரிக்கின்றனர்.

மதுரையில் உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் பெற்ற சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் 51 யூனிட்கள் உள்ளன. 300 மில்லி, 500 மில்லி, ஒரு லிட்டர், 2 லிட்டர் பாட்டில்களிலும் 20 லிட்டர் கேன்களிலும் நுகர்வோருக்கு தண்ணீர் விற்கப்படுகிறது. சுத்திகரிக்கும் இயந்திரங்களில் பில்டர்கள் முறையாக மாற்றப்படுகிறதா, யூனிட்டிற்குள் செல்வதற்கு முன்பாக கால்களை கழுவ பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசல் தொட்டி உள்ளதா, பேக்கேஜிங் கேன்கள் முறையாக சுத்திகரிக்கப்படுகிறதா என்பதை துறை அலுவலர்கள் ஆய்வு செய்வர்.

யூனிட் பணியாளர்கள் அனைவரும் ஆண்டுக்கொரு முறை ஹெபடிடிஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். கைகளை சுத்தமாக கழுவிய பின்பே தண்ணீரை பாட்டில் அல்லது கேன்களில் சேகரிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அவ்வப்போது யூனிட்களுக்கு ஆய்வு செய்து குறையிருந்தால் நோட்டீஸ் அனுப்புவர்.

கடந்த 6 மாதங்களில் பாட்டில் வாட்டர், கேன் வாட்டர் உட்பட 74 தண்ணீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில் 24 மாதிரிகளின் முடிவுகள் பெறப்பட்டன. இதில் இரண்டு குடிநீர் மாதிரிகளில் 'மோல்டு' எனப்படும் பூஞ்சை இருந்ததால் அவை குடிப்பதற்கு பாதுகாப்பற்றவை என முடிவுகள் வந்தன. அந்த யூனிட்கள் மீது சட்ட நடவடிக்கைக்கு பரிந்துரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 50 மாதிரிகளின் முடிவுகள் பெறப்பட உள்ளன.

துறை அலுவலர்கள் கூறியதாவது: 20 லிட்டர் கேன்களை அதிகபட்சம் 10 முதல் 15 முறை வரை சுத்திகரித்து தண்ணீர் நிரப்பி வீடுகளுக்கு அனுப்பலாம். பழைய கேன்கள் பழுப்பு நிறமாகவோ தேய்ந்து பளபளப்பு குறைந்திருந்தாலோ அவற்றை வேண்டாம் என நுகர்வோர் திருப்பி அனுப்பலாம். இதன் மூலம் அந்த யூனிட்டில் உள்ளவர்கள் பழைய கேன்களை மறுசுழற்சிக்கு அனுப்புவதற்கு ஏதுவாக இருக்கும். கேன் தண்ணீர், பாட்டில் தண்ணீரின் தரம் குறைந்திருந்தாலோ, வயிற்றுப் போக்கு ஏற்பட்டாலோ 94440 42322 வாட்ஸ் அப் எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us