ADDED : ஜூன் 01, 2025 03:51 AM

சோழவந்தான்:சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா நாளை (ஜூன் 2) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஆண்டுதோறும் வைகாசியில் 17 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் ஜூன் 10 பால்குடம், அக்னி சட்டி, ஜூன் 11 பூக்குழி, ஜூன் 17 தேரோட்டம், ஜூன் 18 தீர்த்தவாரி நடைபெறும். திருவிழா நெருங்கும் நிலையில் ஏற்பாடுகள் மெதுவாக நடப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.