ADDED : ஜூன் 01, 2025 03:50 AM
மேலுார்:அலங்காநல்லுாரில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை பல ஆண்டுகளாக மூடி கிடப்பதால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேறு வழியின்றி தனியார் மில்லுக்கு கரும்புகளை வெட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனால் வருவாய் குறைவாகவும், செலவினங்கள் அதிகரிப்பதாலும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. சர்க்கரை ஆலையை திறக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க செயலாளர் கதிரேசன் வலியுறுத்தியுள்ளார்.