/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அரசு மருத்துவமனையில் வாகனங்களுக்கு தடை அரசு மருத்துவமனையில் வாகனங்களுக்கு தடை
அரசு மருத்துவமனையில் வாகனங்களுக்கு தடை
அரசு மருத்துவமனையில் வாகனங்களுக்கு தடை
அரசு மருத்துவமனையில் வாகனங்களுக்கு தடை
ADDED : ஜூன் 01, 2025 03:51 AM
மதுரை:மதுரை அரசு மருத்துவமனையில் வெளிநபர்களின் டூவீலர், கார்களை நிறுத்துவதை தடுக்க டாக்டர் உட்பட பணியாளர்களின் வாகனங்களுக்கு தனி ஸ்டிக்கர் வழங்கும் பணியானது, புதிய ஏஜன்சி மாற்றத்தால் தள்ளிப் போகிறது.
அரசு மருத்துவக் கல்லுாரியில் மாணவர்களின் வாகனங்கள், டாக்டர், நர்ஸ்கள், பிற பணியாளர்களின் வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டன. 3000 டூவீலர்களுக்கு 8 இடங்களில், 350 கார்களுக்கு 5 இடங்களில் பார்க்கிங் செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டன.
இந்நிலையில் மருத்துவமனையில் தேர்வு செய்யப்பட்ட தற்காலிக பணியாளர்களுக்கான தனியார் நிறுவனம் மாற்றப்பட்டு சுமீட் ஏஜன்சி பொறுப்பேற்றது. மருத்துவமனை வார்டுகள், கேட் கீப்பர்கள், சூப்பர்வைசர்கள் புதிதாக மாற்றப்பட்டதால் ஸ்டிக்கர் வழங்கும் பணி தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜூன் முதல் வாரம் முதல் தனியார் வாகனங்கள் மருத்துவமனைக்குள் வருவதற்கு தடை விதிக்கப்படும் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.