மதுரை : திருப்பரங்குன்றம் அருகே வளையங்குளம் கிராமத்தில் மழையின் காரணமாக வீட்டின் கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 3 நபர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ 4 லட்சம் வீதம் மொத்தம் ரூ.12 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலைகளை அமைச்சர் மூர்த்தி வழங்கி ஆறுதல் கூறினார்.
கலெக்டர் சங்கீதா, திருமங்கலம் ஆர்.டி.ஓ., சிவஜோதி உடனிருந்தனர்.