ADDED : மே 21, 2025 04:57 AM

புதுார் : டி.ஆர்.ஓ., காலனி ஓய்வு பெற்ற பேராசிரியர் நிர்மலா 72. ஆறு ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்துவிட்டார். வீட்டில் தனியாக வசித்தார். நேற்று முன்தினம் (மே 19) திருமண விழாவிற்காக திருப்பரங்குன்றம் சென்றார்.
மதியம் 1:30 மணிக்கு வீட்டிற்கு வந்த போது படுக்கையறை கதவு பூட்டப்பட்டதை அறிந்து சந்தேகமடைந்தார். கதவை உடைத்து பார்த்ததில் பீரோவும் பூட்டப்பட்டிருந்தது. மாற்று சாவி மூலம்திறந்தபோதுநகைகள், பணம் திருடு போனது தெரிந்தது. புதுார் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் வாடிப்பட்டியைச் சேர்ந்த பாண்டி 33 என்பவரை கைது செய்து 27 பவுன் நகைகள், ரூ. 9 ஆயிரத்து 300 ரொக்கத்தை மீட்டனர்.