/உள்ளூர் செய்திகள்/மதுரை/மாநகராட்சியில் ரெகுலர் ஏ.இ.,க்கள் பற்றாக்குறையால் திணறுது இன்ஜி பிரிவு: கூடுதல் பொறுப்புகளால் பணியில் இல்லை தரம் மாநகராட்சியில் ரெகுலர் ஏ.இ.,க்கள் பற்றாக்குறையால் திணறுது இன்ஜி பிரிவு: கூடுதல் பொறுப்புகளால் பணியில் இல்லை தரம்
மாநகராட்சியில் ரெகுலர் ஏ.இ.,க்கள் பற்றாக்குறையால் திணறுது இன்ஜி பிரிவு: கூடுதல் பொறுப்புகளால் பணியில் இல்லை தரம்
மாநகராட்சியில் ரெகுலர் ஏ.இ.,க்கள் பற்றாக்குறையால் திணறுது இன்ஜி பிரிவு: கூடுதல் பொறுப்புகளால் பணியில் இல்லை தரம்
மாநகராட்சியில் ரெகுலர் ஏ.இ.,க்கள் பற்றாக்குறையால் திணறுது இன்ஜி பிரிவு: கூடுதல் பொறுப்புகளால் பணியில் இல்லை தரம்
UPDATED : மே 22, 2025 07:09 AM
ADDED : மே 22, 2025 04:25 AM

மாநகராட்சியில் நிர்வாகம், வருவாய் பிரிவுகள்போல் இன்ஜினியரிங் பிரிவு முக்கியமானது. குடிநீர், பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள், கழிவு நீரேற்று நிலையம்,வாகனங்கள் பராமரிப்பு,ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள், குப்பை மேலாண்மை உள்ளிட்ட முக்கிய பணிகள் இப்பிரிவு கண்காணிப்பில் உள்ளன.
ஆனால் 100 வார்டுகளுக்கும் 14 ரெகுலர் ஏ.இ.,க்கள், 7 ஜெ.இ.,க்கள் மட்டும் உள்ளனர். 15 தேர்ச்சி திறன் 2 பணியாளர்களுக்கு 'கூடுதல் ஏ.இ.,க்கள்', 14 தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு 'கூடுதல் ஜெ.இ.,க்கள்' பொறுப்பு வழங்கப்பட்டுள்ளன.
இதில் சிலருக்கு ஏ.இ.,க்களுக்கான பணித்திறன் இல்லை என புகார் உள்ளது. ஆனால் ரெகுலர் ஏ.இ.,க்களை தவிர கூடுதல் பொறுப்பில் உள்ளவர்களுக்கே வார்டுகள் எண்ணிக்கையும், பணிகள் எண்ணிக்கையும் அதிகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது.
உதாரணமாக மண்டலம் 5ல் தேர்ச்சி திறன் 2 பணியாளர் ஒருவருக்கு 4 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒருரெகுலர் ஏ.இ.,க்கே இத்தனை வார்டுகள் ஒதுக்கினால் சிரமம் என்ற நிலையில் தேர்ச்சி திறன் பணியாளருக்கு ஏன்இத்தனை வார்டுகள் ஒதுக்கப்பட்டன என கேள்வி எழுந்துள்ளது.
பொறியியல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:
ஆளுங்கட்சி பிரமுகர்கள் தங்கள் மண்டலம், வார்டுக்கு சாதகமான அதிகாரிகள் வேண்டும் என்ற 'அரசியல்' காரணமாக முக்கிய பணிகளுக்கு திறமையான பொறியாளர்களை ஒதுக்க முடிவதில்லை. ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வார்டுகள் ஒதுக்கும்போது அங்கு நடக்கும் பணிகளை முழுமையாக அவரால் கண்காணிக்க முடிவதில்லை. இதனால் தான் புகார்கள் அதிகரிக்கின்றன. இதுதொடர்பான தலைமை பொறியாளர் (சி.இ.,) கண்காணிப்பும் போதியதாக இல்லை.
இதுதவிர ரெகுலர் ஏ.இ.,க்கள் மேயர் உதவியாளர், சி.இ., செல் பணி, மண்டல அலுவலகத்தில் கணினி பணிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளனர். இதனால் வார்டுகளில் 'கூடுதல் பொறுப்பு' வகிப்போர் அதிகரித்துள்ளனர். இன்ஜி., பிரிவு மீது கண்காணிப்பை அதிகரித்துள்ள கமிஷனர் சித்ரா, உரிய பணிகளுக்கு தகுதியான பொறியாளர்களை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.