ADDED : மே 22, 2025 04:25 AM
மதுரை: தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவமனையில் செவிலியர் தினவிழா நடந்தது. வெங்கடேசன் எம்.பி., செவிலியர்களின் அர்ப்பணிப்பு குறித்து பேசினார்.
மதுரை அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ்குமார் பேசுகையில், ''இந்த வளாகத்தில் மனநலம் மற்றும் நோய் தடுப்பு சிகிச்சை மையங்கள் நிறுவப்படும்'' என்றார். ஆர்.எம்.ஓ., ஸ்ரீலதா நன்றி கூறினார். வலி மற்றும் நோய் தடுப்பு சிகிச்சை மையத்தில் சிறந்த சேவை வழங்கிய செவிலியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.