ADDED : மே 31, 2025 05:09 AM
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லுாரி முதுகலை பொருளாதாரம் ஆராய்ச்சித்துறை, ஆரா ஏரோஸ்பேஸ் நிறுவனம் சார்பில் 'வானமே எல்லை; மாணவர்களுக்கான ட்ரோன் தொழில்நுட்பம்' எனும் தலைப்பில் பயிற்சி வகுப்பு நடந்தது.
ட்ரோன் தொழில்நுட்ப செயல் விளக்கம், நேரடி பைலட்டிங், வான்வழி கண்காணிப்பு, இயக்கவியல், விவசாய பயன்பாடு, தளவாடங்கள் மற்றும் தரவு சேகரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியை பேராசிரியர் ஜெயராணி ஒருங்கிணைப்பு செய்தார். பேராசிரியர் கண்ணபிரான், முத்துராஜா, ஆரா ஏரோஸ்பேஸ் நிறுவனர் ஜீவரஞ்சன், சுந்தரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.