Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/இருபோகத்தின் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர்.. தண்ணீர்..; ஜூன் 6ம் தேதி திறக்க அதிகாரிகள் உறுதி

இருபோகத்தின் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர்.. தண்ணீர்..; ஜூன் 6ம் தேதி திறக்க அதிகாரிகள் உறுதி

இருபோகத்தின் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர்.. தண்ணீர்..; ஜூன் 6ம் தேதி திறக்க அதிகாரிகள் உறுதி

இருபோகத்தின் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர்.. தண்ணீர்..; ஜூன் 6ம் தேதி திறக்க அதிகாரிகள் உறுதி

ADDED : மே 31, 2025 05:09 AM


Google News
Latest Tamil News
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., அன்பழகன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாரதிதாசன், கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் சதீஷ்குமார், வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், துணை இயக்குநர் சாந்தி பங்கேற்றனர்.

விவசாயிகள் பேசியதாவது


பார்த்தசாரதி, திருவாலவாய நல்லுார்: நெல் கொள்முதல் மையங்களில் கமிஷன் வாங்குவது குறித்து மனு கொடுத்து இரண்டு மாதங்களாகியும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. நெல்லையே 120 நாட்களில் விளையவைக்கிறோம். அதிகாரிகளிடம் இருந்து பதில் வாங்குவதற்கும் குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்.

விவசாயி, நடுமுதலைக்குளம்: நடுமுதலைக்குளத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கிறோம். 10 கி.மீ., தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு கால்நடைகளை அழைத்துச் செல்ல முடியவில்லை.

திருப்பதி, குலமங்கலம்: விவசாயிகளை படிக்காதவர்கள் என அதிகாரிகள் நினைக்கின்றனர். எங்களின் மனுக்களுக்கு அதிகாரிகள் பதில் தருவதில்லை. இவ்வாறு பேசினர்.

திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயிலிருந்து வரும் நீர்நிலை வாய்க்கால் ஆக்கிரமிப்பு, மேலுார் வடக்கு நாவினிப்பட்டி பெரியாறு பிரதான கால்வாய் 12 வது பிரிவு கால்வாயின் 18வது மடை வாய்க்கால் ஆக்கிரமிப்பு, கொட்டாம்பட்டி பெரியருவி நீர்த்தேக்க கால்வாயில் ஆக்கிரமிப்பு, புதுசுக்காம்பட்டி கிராமத்தில் வாய்க்கால் ஆக்கிரமிப்பு, உசிலம்பட்டியில் ஜோதிமாணிக்கம் கண்மாய் திருமங்கலம் பிரதான கால்வாயில் ஆக்கிரமிப்பு, மதுரை கிழக்கு சின்னமாங்குளம் ஊராட்சியில் வண்டிப்பாதை ஆக்கிரமிப்பு, நாட்டாபட்டியிலிருந்து பாப்பாபட்டி செல்லும் நீர்வளத்துறை வாய்க்கால் ஆக்கிரமிப்பு குறித்து விவசாயிகள் பேசினர்.

கலெக்டர் பேசியதாவது: கண்மாய், வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை சர்வேயர் மூலம் அளவிடும் கருவிக்காக நீர்வளத்துறையினர் காத்திருக்க வேண்டாம். உங்கள் துறை மூலம் தனியாரிடம் இருந்து நவீன டி.ஜி.பி.எஸ்., கருவியை வாடகைக்கு வாங்கி சர்வேயரிடம் கொடுத்தால் அளவிடும் பணியில் தாமதம் ஏற்படாது. குறைதீர் மனு தொடர்பாக தீர்வு காண்பதற்கு ஒருமாத கால அவகாசம் உள்ளது.

கூட்டம் நடப்பதற்கு ஒருநாள் முன்பாக அந்தந்த துறை அதிகாரிகள் பதில் அனுப்புகின்றனர். விவசாயிகளுக்கு பதில் தருவதில்லை. கூட்டம் நடப்பதற்கு ஒருவாரம் முன்பாக பதில் அனுப்பாவிட்டால் அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடை மருத்துவமனை இல்லாத கிராமங்களில் அலைபேசி யூனிட் மூலம் வாரம் ஒருநாள் முகாம் அமைத்து கால்நடைகளுக்கு தடுப்பூசி, சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.

கூட்டம் துவங்கியதுமே இருபோக விவசாயிகள் தங்களது முதல்போக சாகுபடிக்காக ஜூன் 5 ல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு பதில் அளித்த நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாரதிதாசன் ''அணைப்பட்டி முதல் கள்ளந்திரி வரையான 47ஆயிரத்து 500 ஏக்கர் இருபோக சாகுபடியின் முதல் போகத்திற்கு ஜூன் 6 ல் தண்ணீர் திறக்க சென்னைக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இதுகுறித்து ஜூன் 3 ல் விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடத்தி ஏதாவது மாறுதல் இருந்தால் தெரிவிக்கப்படும்'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us