/உள்ளூர் செய்திகள்/மதுரை/கீழக்குயில்குடியில் தொல்லியல் துறை பொங்கல்விழா கொண்டாட்டம்கீழக்குயில்குடியில் தொல்லியல் துறை பொங்கல்விழா கொண்டாட்டம்
கீழக்குயில்குடியில் தொல்லியல் துறை பொங்கல்விழா கொண்டாட்டம்
கீழக்குயில்குடியில் தொல்லியல் துறை பொங்கல்விழா கொண்டாட்டம்
கீழக்குயில்குடியில் தொல்லியல் துறை பொங்கல்விழா கொண்டாட்டம்
ADDED : ஜன 13, 2024 04:27 AM

மதுரை : இந்திய சுற்றுலாத்துறை சார்பில் மத்திய தொல்லியல் துறைக்குட்பட்ட மதுரை கீழக்குயில்குடி சமணர் மலையில் பொங்கல் விழா நடந்தது.
டிராவல் கிளப், தானம் அறக்கட்டளை, மாநில சுற்றுலாத்துறை, யுவா டூரிஸம் குழுக்கள் இணைந்து ஏற்பாடுகளை செய்தன.
கீழக்குயில்குடி சமணர் மலைக்கான தமிழ், ஆங்கில கையேட்டை இந்தியா டூரிஸம் தென்மண்டல இயக்குநர் வெங்கடேசன் தத்தாத்ரேயன் வெளியிட்டார்.
வெளிநாட்டு பயணிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். கீழக்குயில்குடி, வடிவேல் கரை பெண்கள் கோலப் போட்டியில் பங்கேற்றனர்.
சமணர் மலைக்கு பாரம்பரிய நடைபயணமாக பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அரசு இசைக்கல்லுாரி மாணவர்கள், தங்கபாண்டியன் குழுவினர் கிராமிய நடனம், கலைநிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு காளைகள், அலங்கரிக்கப்பட்ட மாடுகளுடன் கூடிய மாட்டுவண்டிகள் கண்காட்சியாக இடம்பெற்றன. பங்கேற்றவர்களுக்கு பாரம்பரிய உணவு வழங்கப்பட்டது.
இந்தியா டூரிஸம் உதவி இயக்குநர்கள் பத்மாவதி, ஷ்யாம் பாபு, மாவட்ட சுற்றுலா அலுவலர் ஸ்ரீபாலமுருகன், அறக்கட்டளை சுற்றுலா ஆலோசகர் பாரதி உட்பட பலர் பங்கேற்றனர். டிராவல் கிளப் தலைவர் ரவீந்திரன், நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.