ADDED : பிப் 24, 2024 04:09 AM

திருப்பரங்குன்றம், : மதுரை சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரி பட்டமளிப்பு விழா செயலாளர் குமரேஷ் தலைமையில் நடந்தது.
மதுரை சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் குப்புசாமி 170 மாணவியருக்கு பட்டங்களும், 35 மாணவியருக்கு பதக்கங்களும் வழங்கினார். முதல்வர் மவுஷ்மி உறுதிமொழி வாசிக்க மாணவியர் உறுதிமொழி ஏற்றனர். கல்லுாரி தலைவர் மோதிலால், பொருளாளர் பாஸ்கர், நிர்வாக குழு உறுப்பினர்கள் பன்ஷிதர், ராமசுப்பிரமணியன், வெங்கடேஸ்வரன், சவுராஷ்டிரா கல்லுாரி முதல்வர் சீனிவாசன், இயக்குனர் ராமலிங்கம் பங்கேற்றனர்.