/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜெப புத்தகத்துடன் கிறிஸ்தவர்கள் போலீஸ் மீது குற்றச்சாட்டுமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜெப புத்தகத்துடன் கிறிஸ்தவர்கள் போலீஸ் மீது குற்றச்சாட்டு
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜெப புத்தகத்துடன் கிறிஸ்தவர்கள் போலீஸ் மீது குற்றச்சாட்டு
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜெப புத்தகத்துடன் கிறிஸ்தவர்கள் போலீஸ் மீது குற்றச்சாட்டு
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜெப புத்தகத்துடன் கிறிஸ்தவர்கள் போலீஸ் மீது குற்றச்சாட்டு
ADDED : ஜன 11, 2024 04:48 AM
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் போலீஸ் சோதனையை மீறி அம்மன் சன்னதி வரை ஜெப புத்தகத்துடன் வந்த கிறிஸ்தவர்களால் சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அலைபேசி, மாற்று மதம் தொடர்பான பொருட்களை கொண்டு செல்ல தடை உள்ளது.
நேற்று முன்தினம் காலை அம்மன் சன்னதி அருகே வரிசையில் நின்றிருந்த பெண்கள் சிலர், கையடக்க புத்தகத்தை வைத்துக்கொண்டு முனங்கிக்கொண்டிருந்தனர். அங்கிருந்த ஊழியர் சந்தேகப்பட்டு விசாரித்தபோது கிறிஸ்தவர்கள் எனத்தெரிந்தது. அவர்களை கோயில் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றார்.
'சர்ச், பள்ளிவாசலுக்கு மாற்று மதத்தினர் வரும்போது, கோயிலுக்கு மாற்று மதத்தினர் வரக்கூடாதா' என கிறிஸ்தவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அதிகாரிகள், 'இது காலம் காலமாக பின்பற்றும் நடைமுறை.
அறநிலையத்துறை விதிப்படி அதை பின்பற்றிதான் ஆக வேண்டும்' என்றனர். இதைதொடர்ந்து அவர்கள் புறப்பட்டு சென்றனர்.
போலீஸ் சோதனையை மீறி அவர்கள் எப்படி ஜெப புத்தகத்துடன் கோயிலுக்கு வந்தனர் என ஹிந்து அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.
ஹிந்து முன்னணி மதுரை மாவட்ட தலைவர் அழகர்சாமி கூறுகையில், ''பக்தர்கள் கொண்டு வரும் திரி உள்ளிட்ட பொருட்களைக்கூட உள்ளே கொண்டு செல்லக்கூடாது என கெடுபிடி காட்டும் போலீசார் மெத்தனமாக இருந்ததே இதற்கு காரணம்.
அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும். கோயில் நிர்வாகமும் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் போராட்டம் நடத்துவோம் என கோயில் நிர்வாகத்திடம் எச்சரித்துள்ளோம்'' என்றார்.