மோடிக்கு இது அப்பட்டமான தோல்வி இண்டியா கூட்டணி கூட்டத்தில் கார்கே
மோடிக்கு இது அப்பட்டமான தோல்வி இண்டியா கூட்டணி கூட்டத்தில் கார்கே
மோடிக்கு இது அப்பட்டமான தோல்வி இண்டியா கூட்டணி கூட்டத்தில் கார்கே
UPDATED : ஜூன் 05, 2024 09:17 PM
ADDED : ஜூன் 05, 2024 06:36 PM

புதுடில்லி: ‛‛ இண்டியா கூட்டணி'' கூட்டம் டில்லியில் துவங்கியது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். கூட்ட இறுதியில் பேசிய காங்., தலைவர் கார்கே மோடிக்கு இது அப்பட்டமான தோல்வி என்றார்.
லோக்சபா தேர்தலில் இக்கூட்டணிக்கு 232 எம்.பி.க்கள் உள்ளனர். பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இன்று இண்டியா கூட்டணி ஆலோசனை கூட்டம் டில்லியில் காங்.,தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் கூடியது.
இக்கூட்டத்தில் காங்., மூத்த தலைவர் சோனியா, ராகுல், சரத்பவார், சுப்ரியா சுலே, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா கட்சியின் முதல்வர் சம்பய் சோரன், கல்பனா. சமஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்..
பெரும்பான்மை ஆதரவை திரட்டி மத்தியில் ஆட்சி அமைக்கலாமா ? அல்லது எதிர்க்கட்சி வரிசையில் அமரலாமா? என்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
கூட்ட முடிவில் காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: .
மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு கிடைதத்து அரசியல் தோல்வி அல்ல அப்பட்டமான தோல்வி.மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி பெற்ற வெற்றி மோடிக்கு எதிரான வெற்றியாகும் என்றார்.