சிறையில் இருந்து கொண்டே மாஜி முதல்வரை வீழ்த்திய சுயேட்சை
சிறையில் இருந்து கொண்டே மாஜி முதல்வரை வீழ்த்திய சுயேட்சை
சிறையில் இருந்து கொண்டே மாஜி முதல்வரை வீழ்த்திய சுயேட்சை
ADDED : ஜூன் 05, 2024 07:10 PM

புதுடில்லி: காஷ்மீரின் பாராமுல்லா லோக்சபா தொகுதியில் அப்துல் ஷேக் ரஷீத் என்பவர் சிறையில் இருந்து கொண்டே சுயேட்சையாக போட்டியிட்டு முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவை வீழ்த்தினார்.
ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர் அப்துல் ஷேக் ரஷீத், என்ற இன்ஜினியர் ரஷீத், இவர் பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டியதாக 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் காஷ்மீரின் பாராமுல்லா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேசிய மாநாட்டு கட்சியின் ஒமர்அப்துல்லாவை 2 லட்சத்து 4 ஆயிரத்து 528 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதே போன்று பஞ்சாபின் காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரித்பால்சிங், 2023 ஏப்ரலில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அசாம் மாநிலம் திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இவரும் பஞ்சாப் மாநிலம் கஹாதூர் ஷாஹிப் லோக்சபா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியின் குல்பிர்சிங்ஜிரா வை 1 லட்சத்து 72 ஆயிரத்து 281 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
சிறையில் உள்ள இரு சுயேட்சை எம்.பி.க்களும் எவ்வாறு பதவியேற்பர் என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.