தே.ஜ., கூட்டணி தலைவராக மோடி தேர்வு
தே.ஜ., கூட்டணி தலைவராக மோடி தேர்வு
தே.ஜ., கூட்டணி தலைவராக மோடி தேர்வு

நிதிஷ், சந்திரபாபு நாயுடு ஆதரவு கடிதம்
பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைப்பதற்காக நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவு கடிதம் வழங்கினர். வரும் 7-ம் தேதி நடைபெறும் பா.ஜ.,எம்.பிக்கள் கூட்டத்தில் பிரதமராக மோடி ஒரு மவதாக தேர்வு செய்ய்பபட்ட பின்னர் ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என கூறப்படுகிறது.
பியூஷ்கோயல் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
தே.ஜ., கூட்டணி கூட்டம் முடிந்த பின்னர் மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் இல்லத்தில் அவரை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். அப்போது ஆட்சியில் பங்குபெறும் போது முக்கிய துறைகள் கேட்டு பெறுவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
மோடிக்கு கூட்டணி தலைவர்கள் பாராட்டு
உலகில் இந்தியாவின் பெருமையை அதிகரிப்பதில் மோடியின் பங்களிப்பு அதிகம். மோடியின் தலைமைத்துவம், அவரது தலைமையில் தேசம் வளர்ச்சி அமைந்துள்ளது . வறுமை ஒழிப்புக்காக மோடி மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியது. இவ்வாறு கூட்டணி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.