/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குண்டாறு வடிநில கோட்டத்தில் சென்னை நிபுணர்கள் ஆய்வு குண்டாறு வடிநில கோட்டத்தில் சென்னை நிபுணர்கள் ஆய்வு
குண்டாறு வடிநில கோட்டத்தில் சென்னை நிபுணர்கள் ஆய்வு
குண்டாறு வடிநில கோட்டத்தில் சென்னை நிபுணர்கள் ஆய்வு
குண்டாறு வடிநில கோட்டத்தில் சென்னை நிபுணர்கள் ஆய்வு
ADDED : செப் 15, 2025 03:59 AM

உசிலம்பட்டி : உசிலம்பட்டி குண்டாறு வடிநில கோட்டப்பகுதியில் சென்னை தரமணி ஆய்வு மைய பொறியாளர்கள் நீர்வள ஆதாரங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாட்டில் நீர்வளத்துறையின் கீழ் 127 உப வடிநிலங்களை உள்ளடக்கி, 17 பெரிய வடிநிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிலத்தடி நீர்மட்டம், வேளாண்மை, நில அமைப்பு குறித்த ஆய்வு பணிகளை அங்கு மேற்கொள்கின்றனர்.
நிலவியல் துறை இணை இயக்குநர் தலைமையில் 20 பொறியாளர்கள் குழு நேற்று உசிலம்பட்டி பகுதியில் உள்ள குண்டாறு வடிநில கோட்டத்தில் ஆய்வுபணிகளை மேற்கொண்டது. 58 கிராம கால்வாய் தொட்டிப்பாலம், பிரதான கால்வாயில் இருந்து வலது, இடது கால்வாய்களாக பிரியும் பகுதிகளில் குழுவினர் ஆய்வு செய்தனர். கால்வாய் பயன்பாட்டுக்கு வந்தபின் நிலத்தடி நீர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நிலவியல் அமைப்பு, வேளாண்மை நிலவரம் பற்றி ஆய்வு செய்தனர்.
மேற்குப்பகுதியில் அசுவமாநதி தடுப்பணை, பேரையூர் தாலுகாவில் குண்டாறு வடிநில பகுதிகளிலும் ஆய்வு நடந்தது. உதவி செயற்பொறியாளர் மனோகரன், உதவிப் பொறியாளர்கள் பாண்டியன், ஏர்னஸ்டோ் உசிலம்பட்டி பகுதியில் தற்போதுள்ள நீர்வளம் குறித்து விளக்கம் அளித்தனர்.