/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வானரங்களைப் பிடித்து வனத்தில் விடுங்க சார் வானரங்களைப் பிடித்து வனத்தில் விடுங்க சார்
வானரங்களைப் பிடித்து வனத்தில் விடுங்க சார்
வானரங்களைப் பிடித்து வனத்தில் விடுங்க சார்
வானரங்களைப் பிடித்து வனத்தில் விடுங்க சார்
ADDED : செப் 15, 2025 03:58 AM

மேலுார்: மேலுாரில் வீட்டுக்குள் புகுந்து உணவுப்பொருட்களை துாக்கிச் செல்லும் குரங்குகள், விரட்டுவோரை கடிப்பதால் மக்கள் அச்சமுடன் உள்ளனர்.
மேலுார் நகராட்சி திருவள்ளுவர் தெரு, பேங்க் ரோடு உள்பட பிரதானபகுதியில் பெரும்பாலும் கடைகள், அலுவலகங்கள் உள்ளன. வீடுகளும் நெருக்கமாக உள்ளன. இப்பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட குரங்குகளும் கூட்டம், கூட்டமாக வசிக்கின்றன. வீடு, கடைகளின் கதவை திறந்தாலே உள்ளே புகுந்து, உணவுப்பொருட்களை பை, பாத்திரங்களுடன் துாக்கி பாய்ந்து செல்கின்றன. ும், குழந்தைகளிடம் இருந்து பால் பாட்டிலை பிடுங்கி சென்றதும் உண்டு.
தடுக்க வருவோரை முறைத்து விரட்டி கடிக்கின்றன. பூட்டிய வீட்டுக்குள்ளும் ஜன்னல் பகுதியில் கிடைத்த சிறிய துவாரங்கள் வழியாக குட்டிக் குரங்குகள் புகுந்து ஆட்டம் போடுகின்றன. பொருட்களை உடைத்து வீணாக்குகின்றன. சி.சி.டி.வி., கேமரா கேபிள், இன்டர்நெட், மின் ஒயர்களில் தொங்கி ஆட்டம் போடுவதால் அவை சேதமடைகிறது. அதனால் பொது மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது.
கடைக்காரர்கள் வியாபாரத்தை கவனிக்க முடியாமல் திண்டாடுகின்றனர். வனத்துறை அதிகாரிகள் வானரங்களை பிடித்து வனத்தில் விட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.