ADDED : செப் 15, 2025 04:00 AM

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை மகளிர் கல்லுாரிகளுக்கான மகளிர் பிரிவு வாலிபால் போட்டிகள் சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் நடந்தது. 13 அணிகள் கலந்து கொண்டன.
முதல் அரையிறுதிப்போட்டியில் யாதவர் கல்லுாரி அணி 25 -- 17, 19 -- 25, 25 -- 15 என்ற செட் கணக்கில் மதுரை மீனாட்சி அரசு கல்லுாரி அணியை வென்றது. 2வது அரையிறுதிப்போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி அணி 25 -- 15, 25 -- 12 என்ற செட் கணக்கில் மங்கையர்க்கரசி கல்லுாரி அணியை வென்றது.
மூன்றாமிடத்திற்கான போட்டியில் மீனாட்சி கல்லுாரி அணி 25 - 8, 25 - 9 என்ற செட்களில் மங்கையர்க்கரசி கல்லுாரி அணியை வீழ்த்தியது. இறுதிப்போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி 25 - 8, 25 -- 9 என்ற செட் கணக்கில் யாதவர் கல்லுாரி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
முதல்வர் பால் ஜெயகர், துணை முதல்வர் சாமுவேல் அன்புச்செல்வன், நிதிக்காப்பாளர் பியூலா ரூபி கமலம், உடற்கல்வி துறைத் தலைவர் பாலகிருஷ்ணன், உடற்கல்வி இயக்குநர்கள் நிர்மல்சிங், ரமேஷ் (பல்கலை) வாழ்த்தினர்.