/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 'லைப் ஸ்டைலை' மாற்றுங்க :கர்ப்பிணிகளும் இலகுவான வேலை செய்ய வேண்டும் 'லைப் ஸ்டைலை' மாற்றுங்க :கர்ப்பிணிகளும் இலகுவான வேலை செய்ய வேண்டும்
'லைப் ஸ்டைலை' மாற்றுங்க :கர்ப்பிணிகளும் இலகுவான வேலை செய்ய வேண்டும்
'லைப் ஸ்டைலை' மாற்றுங்க :கர்ப்பிணிகளும் இலகுவான வேலை செய்ய வேண்டும்
'லைப் ஸ்டைலை' மாற்றுங்க :கர்ப்பிணிகளும் இலகுவான வேலை செய்ய வேண்டும்

கர்ப்பகால நோய்க்கு வாய்ப்பு
அவர்கள் கூறியதாவது: பெரும்பாலான குடும்பங்களில் ஒற்றை குழந்தை மட்டுமே பெறுவதால் கர்ப்பமானதுமே கூடுதல் கவனம் என்ற பெயரில் பெண் வீட்டிலும், கணவர் வீட்டிலும் ஓய்வெடுக்க வலியுறுத்துகின்றனர். கர்ப்பம் இயல்பான ஒரு விஷயம். வழக்கமான வேலைகளைச் செய்ய கர்ப்பம் இடையூறாக இருப்பதில்லை. நிறைய ஓய்வு தேவை என பெற்றோர், உறவினர் நினைத்து கர்ப்பிணியை வேலை செய்ய அனுமதிப்பதில்லை.
கண்காணிப்பு அவசியம்
அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு 8வது வாரத்தில் ரத்தஅழுத்தம், சர்க்கரை பரிசோதனை செய்யப்படுகிறது. குழந்தை பிறக்கும் வரை எந்த நேரத்திலும் இப்பிரச்னை வரலாம் என்பதால் 24வது வாரத்திலும் 32 முதல் 36வது வாரத்திலும் இப்பரிசோதனை செய்து சிக்கலான பிரசவத்தை முடிந்தவரை தவிர்க்கிறோம். ஒருவேளை ரத்தஅழுத்தம், சர்க்கரை இருந்தால் கர்ப்பிணிகள் வேளை தவறாமல் மாத்திரை சாப்பிடுவதை வீட்டில் உள்ளோர் உறுதிப்படுத்த வேண்டும் என்றனர்.