ADDED : ஜூன் 14, 2025 05:29 AM
திருமங்கலம்: திருமங்கலம் தாலுகாவில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட விடத்த குளத்தில் உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம் தோட்டக்கலை துறை மூலம் நடத்தப்பட்டது.
மாவட்ட விற்பனை குழு செயலாளர் அம்சவேணி வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை திட்டங்கள், இ நாம் செயலி பற்றி பேசினார்.
வேளாண் கால்நடை கூட்டுறவு வேளாண் பொறியியல் துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் தங்களது துறை செயல்பாடுகள் குறித்து பேசினர். ஏற்பாடுகளை தோட்டக்கலை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வி, துணை அலுவலர் பாஸ்கர் ராஜா, உதவி அலுவலர்கள் மங்களதேவி, அர்ஜுன் செய்திருந்தனர்.