ADDED : ஜூன் 14, 2025 05:28 AM
மதுரை: மதுரை மேற்கு கோட்டம், நகர், வடக்கு பிரிவில் உள்ள மின் இணைப்புகள் நிர்வாக காரணங்களுக்காக ஜூன் 16 முதல் ஞானஒளிவுபுரம் மின் பகிர்மானத்துக்கு மாற்றப்படவுள்ளது.
வடக்கு பிரிவில் உள்ள 'ஏ, பி, சி, இ, எப்'மின் இணைப்புகள் ஞானஒளிவுபுரத்தின் '017 - எப்கியூ, எப்.ஆர்., எப்.எஸ்., எப்.டி., எப்.யூ.,'எனும் இணைப்புக்கு மாற்றப்படும். மின்நுகர்வோர்கள் உதவிக்கு 94458 52960 (நகர் வடக்கு பிரிவு), 94458 52948 (ஞானஒளிபுரம்) எனும் அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.