/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆமை வேகத்தில் நடக்குது ராஜபாளையம் 4 வழிச்சாலை பணி ஆமை வேகத்தில் நடக்குது ராஜபாளையம் 4 வழிச்சாலை பணி
ஆமை வேகத்தில் நடக்குது ராஜபாளையம் 4 வழிச்சாலை பணி
ஆமை வேகத்தில் நடக்குது ராஜபாளையம் 4 வழிச்சாலை பணி
ஆமை வேகத்தில் நடக்குது ராஜபாளையம் 4 வழிச்சாலை பணி
ADDED : ஜூன் 14, 2025 05:27 AM

பேரையூர்: தென்காசி ரோட்டில் திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான 4 வழிச்சாலை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மதுரையில் இருந்து தென்காசி செல்லும் நெடுஞ்சாலையில், திருமங்கலம்-ராஜபாளையம் இடையே 71 கி.மீ., தொலைவுக்கு 4 வழி சாலை அமைக்கும் பணிகள் 2 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கிறது.
இந்த தடத்தில் ரோடுகள் அமைக்கும் பணி பெரும்பாலும் முடிவடைந்துள்ள நிலையில் மேம்பாலங்கள் அமைக்கும் பணியில் காலதாமதம் ஏற்படுகிறது.
திருமங்கலத்தில் இருந்து ஆலம்பட்டி, புதுப்பட்டி, டி.குன்னத்துார், டி.கல்லுப்பட்டி புறவழிச் சாலையில் 4 இடங்களிலும், அம்மாபட்டி, சுப்புலாபுரம் பகுதிகளிலும் மேம்பாலங்கள் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது.
இதனால் ரோடுகளில் பல இடங்களில் 'டேக் டைவர்சன் போர்டு'கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த ரோடுகள் பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக உள்ளன. இதில் அடிக்கடி விபத்துக்கள் நடந்துள்ளன.
கடந்தாண்டில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடக்கும் இந்தப்பணிகளை துரிதமாக முடிக்க 'நகாய்' அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.