ADDED : பிப் 12, 2024 05:08 AM
பேரையூர்: பேரையூரில் டூவீலர் வாகனங்களை ஆக்கிரமித்து நிறுத்துவதால் பஸ் ஸ்டாண்ட் கட்டியதற்கான நோக்கமே மாறிப்போனது.
பேரையூரில் பஸ் ஸ்டாண்டில் இருந்து தென்மாவட்ட நகரங்கள் அனைத்துக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேரையூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் கொண்டு வரும் டூ வீலர்கள், கார்களை பஸ் நிலையத்தில் நிறுத்திவிட்டு பஸ்சைப் பிடித்துச் செல்கின்றனர்.
பஸ் நிலையத்திற்குள் டூவீலர்களையும், கார்களையும் நிறுத்திச் செல்வதால் பஸ்களுக்கென ஊர்வாரியாக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் நிற்பதற்கு பதில் வேறு இடத்தில் நிற்கின்றன. இதனால் பயணிகள் குழப்பம் அடைகின்றனர். பஸ் நிலையத்திற்குள் இருக்கும் பேரூராட்சி அலுவலகமும் இதை கண்டு கொள்வதில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும்.