/உள்ளூர் செய்திகள்/மதுரை/'‛ஜல் ஜல்' சலங்கை ஒலியோடு சாலையில் ஓடும் காளைகள் சலங்கை வியாபாரம் '‛சுறுசுறு''‛ஜல் ஜல்' சலங்கை ஒலியோடு சாலையில் ஓடும் காளைகள் சலங்கை வியாபாரம் '‛சுறுசுறு'
'‛ஜல் ஜல்' சலங்கை ஒலியோடு சாலையில் ஓடும் காளைகள் சலங்கை வியாபாரம் '‛சுறுசுறு'
'‛ஜல் ஜல்' சலங்கை ஒலியோடு சாலையில் ஓடும் காளைகள் சலங்கை வியாபாரம் '‛சுறுசுறு'
'‛ஜல் ஜல்' சலங்கை ஒலியோடு சாலையில் ஓடும் காளைகள் சலங்கை வியாபாரம் '‛சுறுசுறு'
ADDED : ஜன 08, 2024 06:01 AM

கொட்டாம்பட்டி : கொட்டம்பட்டியில் காளைகளுக்கு அலங்காரம் செய்வதற்காக தயாரிக்கப்படும் சலங்கை மணிகளின் வியாபாரம் களை கட்ட துவங்கியுள்ளது.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு நடைபெறும்.
இதில் கலந்து கொள்ளும் மாட்டை அலங்கரிப்பதில் மணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த சலங்கையை கொட்டாம்பட்டியை சேர்ந்த ரவி பாரம்பரியமாக தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
ரவி கூறியதாவது : 9 முதல் 13 எண்ணிக்கை வரையிலான வெண்கலம், சில்வர் மணி ரூ.2,300 முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும், அரியக்குடி மணி ரூ. 15 ஆயிரத்திற்கும் விற்பனை செய்கிறேன். உழவுக்கு பயன்படுத்தும் காளைகள் முதல் ஜல்லிக்கட்டு காளைகள் வரை மணியை கட்டுகின்றனர்.
மணிகள் எழுப்பும் ஓசையால் சோர்வு தெரியாமல் காளைகள் உற்சாகமாக ஓடும். குறைந்த விலையில் தரமாக செய்வதால் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
குறைந்த வருமானம் கிடைத்தாலும் மாடுகளை அலங்காரம் செய்வதில் மன நிறைவு கிடைக்கிறது, என்றார்.