திருநகர்: மாநகராட்சி 95வது வார்டு திருநகர் 3வது பஸ் நிறுத்தம் நேதாஜி இரண்டாவது தெருவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது.
இது சேதம் அடைந்த நிலையில் கட்டடத்தை அகற்றிவிட்டு ரூ. 30 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டவும், அந்த வளாகத்தில் ரூ. 7 லட்சத்தில் கவுன்சிலர் அலுவலகம் கட்டவும் பூமி பூஜை நடந்தது.
இதில் மேயர் இந்திராணி பொன்வசந்த், மண்டலத் தலைவர் சுவிதா, கவுன்சிலர் இந்திராகாந்தி, துணை கமிஷனர் சுரேஷ், உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் கலந்து கொண்டனர்.