Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ விவசாயிகள் கவனத்திற்கு

விவசாயிகள் கவனத்திற்கு

விவசாயிகள் கவனத்திற்கு

விவசாயிகள் கவனத்திற்கு

ADDED : மே 22, 2025 04:31 AM


Google News
பேரையூர்:டி.கல்லுப்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் விமலா கூறியதாவது: பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் மே 31 வரை வட்டார வேளாண் விரிவாக்க மையம், பொது சேவை மையம், இந்திய அஞ்சல் வங்கி சென்று பயனடையலாம்.

நில உடமை பதிவேற்றம், இ.கே.ஒய்.சி., பதிவேற்றம் செய்யாத விவசாயிகள் பொது சேவை மையம், வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம். நில உடமை பதிவேற்றம் செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வரும் ஜூனில் 20வது தவணை பணம் விடுவிக்கப்படும். மேலும் வங்கி கணக்குடன், ஆதார் எண் இணைக்காதவர்கள் உடனே இணைக்க வேண்டும். 2019 பிப். 1ல் நில பட்டா வைத்திருக்கும் தகுதி உடைய, பதிவு செய்யாத விவசாயிகள் அனைத்து ஆவணங்களையும் பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us